மது போதையில் பள்ளிக்கு வந்து மாண்வர்களுக்கு மது அருந்து என பாடம் எடுத்த ஆசிரியர்!

0:00 / 05:18
சத்தீஸ்கர் மாநிலம் கொரிய மாவட்டத்த்தில் உள்ள முர்மா பகுதியில் உள்ளது உன்னயன் தொடக்க பள்ளி.இந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சிவ்பாரன்.இவர் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கு மது அருந்தி போதையில் வந்து உள்ளார். போதையில் வந்த்ததும் இல்லாமல் அவர் போதையிலேயே மாணவர்களுக்கு பாடம் நடத்தி உள்ளார்.

அப்போது கரும்பலக்கையில் எழுதிய ஆசிரியர் டாறு பியோ (daaru piyo) என எழுது உள்ளார் டாறு பியோ என்றால் மது அருந்து என அர்த்தமாம் அதை மாணவர்களிடம் வாசிக்குமாறும் கூறி உள்ளார். இதை உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் வீடியோ எடுத்து உள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது இது குறித்து மாவட்ட கல்வித்துறை நிர்வாகம் அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து உள்ளது.

சிவ்பாரன் குடிபோதையில் மாணவர்களுக்கு பாடம் எடுத்ததை ஒப்புக்கொண்டார்.மேலும் அடிக்கடி பள்ளி கூடத்துக்கு போதையில் வருவதையும் ஒப்புகொண்டார்.எனினும் பாடதிட்டத்தின் படி டாறு பியோ (மது அருந்து) என் இருந்ததாகவும் அதையே தான் மாணவர்களுக்கு பாடமாக எடுததாகவும் கூறினார். பின்னர் தன் செயலுக்கு மன்னிப்பு கேட்ட ஆசிரியர் இனி குடிப்பதை நிறுத்த முயற்சி செய்வதாகவும் கூறி உள்ளார்.

மது போதையில் பள்ளிக்கு வந்து பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். என கொரிய மாவட்ட கலெக்டர் சஞ்சீவ் ஷா தெரிவித்து உள்ளார்.