0:00 / 05:18
ஆயிரம் தான் கவிதை சொன்னேன்.. அழகழகா பொய் சொன்னேன்.. பெத்தவளே உன் பெருமை ஒத்த வரி சொல்லலியே...” வைரமுத்துவின் இந்த கவிதை வரிகள்தான் இந்த வீடியோவைப் பார்க்கையில் நினைவுக்கு வருகின்றன.
உண்மையில் நமக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த அம்மாவுக்காக அப்படி என்ன செய்து விட்டோம் என்று நினைக்கையில், அவளது அன்புக்கு ஈடான ஒன்றை நம்மால் ஒருபோதும் கொடுத்து விட முடியாதென்றே தோன்றுகிறது. ஒரு சில துளி கண்ணீரைத் தவிர....
அந்த வகையில் பள்ளிக் குழந்தைகளின் கல்விக்காக உதவும் தனியார் நிறுவனம் ஒன்று, தங்களிடம் உதவி பெறும் பள்ளிக் குழந்தைகளிடம், அவர்களின் அம்மாவைப் பற்றி கேட்க ஒரு சிறுமி, “என்னை டாக்டராக்க வேண்டும் என்பதற்காக, முன்பு என் அம்மா 8 மணி நேரம் வேலை பார்த்தார்
. அந்த பணம் போதாது என்று தெரிந்ததும் 12 மணி நேரம் வேலைக்குப் போனார். இப்போது ஞாயிற்றுக் கிழமைகளில் கூட வேலைக்கு போகிறார். நான் ஒரு டாக்டராகி அவளை சந்தோஷப்படுத்த வேண்டும்... எனக்கு உதவி கிடைத்தால் நிச்சயம் டாக்டராவேன்.” என்கிறாள்.
கன்னத்தில் கண்ணீர்த் துளிகள் உருள, “நான் அம்மாவைப் பற்றி எவ்வளவு பேசினாலும், அது நிச்சயம் போதாது” என்கிறான் ஒரு சிறுவன். இது போன்று நம்மை மவுனமாய் அழவைக்கும் ஏகப்பட்ட கணங்கள் இந்த வீடியோவில் உண்டு.
அதே நேரம் இது போன்று உதவி கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு http://www.nivea.in/products/campaigns/ext/en-IN/Moms%20Touch இந்த லிங்கினை கிளிக் செய்வதன் மூலமாக நீங்களும் உதவலாம்.
