0:00 / 05:18
மெக்சிகோவில் உள்ள மாண்டேரி லா பாஸ்டோரா வன விலங்கு சரணாலயத்திற்கு ஸ்டேசி அலிஜெண்ட்ரா டோரஸ் கியூலர் என்ற இளம் பெண் தனது தோழியுடன் சென்றார். முதலை அடைபட்டு இருக்கும் இடத்தை பார்தததும் அந்த பகுதியின் சுவரை தாண்டு குதித்து இறங்கினார் அங்கு படுத்து இருக்கும் முதலையை தொட்டார் அது திடீர் என சீறி பாய்ந்தது. இதை பார்ததும் அவர் அலறி அடித்து கொண்டு மீண்டும் அந்த பகுதியின் சுவரில் ஏறி மேல் வந்து விட்டார்.
இந்த காட்சிகள் முழுவதையும் படம் பிடித்த அவரது தோழி அதனை சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இதை பார்த்த வன வில்ங்கு நிர்வாகத்தினர் கியூலர் மீண்டு வனவிலைங்கு சரணாலயத்தில் நுழைவதற்கு தடை விதித்து உள்ளனர். சமூக வலைதளத்தில் பதிவிடுவதற்கு என்றே இந்த வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது என வன விலங்கு சரணாலய நிர்வாகம் சந்தேகம் கொள்கிறது.
